மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம் ; கைதானவர்களின் பகீர் வாக்குமூலம்

Sri Lanka Police Batticaloa Crime Gold
By Sahana Mar 26, 2026 05:28 AM GMT
Report

மட்டக்களப்பில் பெண்களை ஏமாற்றி, கடத்தி கொலை செய்தமை தொடர்பில் கைதான சந்தேகநபர்களிடமிருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும், மாதாந்த தவணைக் கட்டண அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான முற்பணத்தை, திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்து செலுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம் ; கைதானவர்களின் பகீர் வாக்குமூலம் | Batticaloa Abandoned Well Arrestees Confessions

சுமார் 19 பவுண் தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனை சுமார் 50 இலட்சம் ரூபாய்க்கு அவர்கள் விற்பனை செய்துள்ளனர்.

முதற்கட்டமாக, நகைகளை அடகு வைத்து, பின்னர் அவற்றை மீட்டு, விற்பனை செய்துள்ளதாகவும் சந்தேகநபர்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே நகையக உரிமையாளர்கள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

முன்னதாக கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருடன் யுவதி ஒருவர் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, பல மர்மங்கள் வெளிக்கொணரப்பட்டன. குறித்த கிணற்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் உடலமும் மீட்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், பல குற்றச் செயல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம் ; கைதானவர்களின் பகீர் வாக்குமூலம் | Batticaloa Abandoned Well Arrestees Confessions

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 03 பிரதான சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 2 நகையக உரிமையாளர்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச் செயல்கள் தொடர்பில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய, கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US