மட்டக்களப்பில் முதல் முறையாக வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்ட இரு மாணவர்கள்
2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஹொரவ்பத்தானை, ரத்மலையில் முதல் முறையாக வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ஹசன் குத்துஸ் முஹம்மத் சம்ரி தற்போது வெளியாகிய உயர் தர பெறுபவர்களின் படி 3A பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி உள்ளார்
தொடர்ந்து அதே பிரதேசத்தில் மீண்டும் ஒரு மாணவி 2A B பெறுபேற்றை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி உள்ளார்
குறித்த மாணவி பிரபல ஆசிரியர் மற்றும் அதிபருமான Miskeen Vidane Latheef அவர்களின் செல்வப் புதல்வி Miskeen Vidane Sameeha இம்முறை இடம் பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.