படலந்த சம்பவம்; ரணிலின் குடியுரிமையை இரத்து செய்ய கோரிக்கை
இலங்கையில் 1988-89 பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழு ஒன்று, சர்ச்சைக்குரிய படலந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதிய ஆணையத்தை நியமிக்க வேண்டும் அல்லது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமைகளை இரத்து செய்ய வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் போராட்ட கூட்டணி அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. நேற்று(17) பொலன்னறுவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.
அதேவேளை அரசாங்கத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்காகவே பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றம் சுமத்தினார்.