அவசரமாக நாடு திரும்பும் நிதியமைச்சர்!
அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று இரவு மீண்டும் அங்கிருத்து வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வந்தடையும் அவர், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையில் தலையீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பி.பீ ஜயசுந்தர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், அரசாங்கம் இது தொடர்பான உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
அதேவேளை , அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ச ஜனவரியிலேயே நாடு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், அவர் அவசரமாக நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.