நேற்று நடைபெற்றது சட்டத்தரணிகள் சங்க கூட்டமா .....அரசியல் தலைவர்களின் கூட்டமா !
சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டமா அல்லது அரசியல் தலைவர்களின் கூட்டமா நேற்று நடைபெற்றது என்று தெரியவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
உதய கம்மன்பில, தயாசிறி ஜயசேகர,சாகர காரியவசம் போன்றவர்கள் ஒரே இடத்தில் கூடுகிறார்கள் என்றால்அது எவ்வாறுபட்ட கூட்டமாக இருக்கும்.

எத்தனை வழக்குகளை செய்து இருப்பார்கள்?
இந்த உதயகம்மன்பில, தயாசிறி ஜயசேகர போன்றவர்கள் சட்டதரணி என்று சொல்கிறார்கள் இவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகளை செய்து இருப்பார்கள் என்று தெரியவில்லை.
தயாசிறி ஜயசேகர சொல்வதை போன்று ஓய்வு பெறும் வயது எல்லையை அதிகரிப்பதால் அப்படி என்ன ஜனநாயகம் செத்திடும்.
கடந்த காலங்களில் நீதி துறையில் மாத்திரமல்ல முத்துறைகளிலும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையிலும் அரசியல் தலையீடுகள் இருந்த போது ஜனநாயகம் வாழ்ந்ததா? என்ற கீள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.