கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எடுக்கப்பட்டவுள்ள அதிரடி நடவடிக்கை!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் வகையில் புதிய சிசிரிவி கமரா கட்டுப்பாட்டு நிலையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் Tiran Alles பணிப்புரை விடுத்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் (17-08-2023) இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
குறித்த கமரா அமைப்பு மூலம் புதிய தொழில்நுட்ப மென்பொருளைப் பயன்படுத்தி தரவுகளை பகுப்பாய்வு செய்ய முடியும் என அமைச்சர் திரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயணிகள் வருகை முனையம் மற்றும் புறப்படும் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிவரவு அதிகாரிகள் கவுன்ட்டர்களை ஆய்வு செய்தனர்.
இதேவேளை, விமானப் பயணிகளுக்கு திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்கும், மற்ற சர்வதேச விமான நிலைய நிலைமைகளுக்கு ஏற்ப குடியேற்ற சேவைகளை வழங்குவதற்கும், தரைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், புதிய e-gate கவுண்டர்கள் அமைப்பது தொடர்பிலும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.