அமாவாசை அன்று வாழைக்காய் கண்டிப்பாக சமைக்கவேண்டும்! ஏன் தெரியுமா?
முன்னோர்கள் வழிபாடு என்பது நம்முடைய வாழ்வில் மிக இன்றியமையாத முக்கியமான ஒன்று. மாதா மாதம் வரும் அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாகும்.
அதிலும் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் முக்கியமான அமாவாசையாகும். அந்தவகையில் வரும் 31 ஆம் திகதி தை அமாவாசை வருகின்றது.
அன்றையதினம் இறந்த எமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையல் படைப்பார்கள்.

அமாவாசை அன்று வாழைக்காய் கண்டிப்பாக சமைக்கவேண்டும்
ஏனெனில் அமாவாசை அன்று சமைக்கும் உணவை படையல் வைத்து நம் முன்னோர்களுக்கு கொடுப்பதாக நினைத்து காக்கைக்கு வைத்து வருகின்றோம்.
இவ்வாறு படையல் செய்யும் சாப்பாட்டில் கீரை, காய், கிழங்கு ஆகிய மூன்று உணவுப் பொருட்களுமே சமைக்க வேண்டும்.
அதில் மிகவும் முக்கியமானது வாழைக்காய்தான். ஏனெனில் முன்னோர்களின் அருளால் நம் குலமும், சந்ததிகளும் வாழையடி வாழையாக தழைக்க வேண்டும்.
எனவேதான் வாழைக்காயை தவறாமல் அமவாசையில் சமைக்கின்றார்கள் என கூறப்படுகின்றது.