இங்கிலாந்து சுற்று பயண சர்ச்சை; இலங்கை வீரர்கள் மீதான தடை நீக்கம்!
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது முறையற்ற விதமாக நடந்து கொண்ட மூன்று கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக , நிரோஷன் டிக்வெல்ல மீது விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கப்படவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழு இன்று பிற்பகல் இதனை தீர்மானித்ததாக இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது முறையற்ற விதமாக நடந்து கொண்ட இலங்கை அணியின் முன்னாள் துணை கப்டன் குசல் மெண்டிஸ், சகலதுறை ஆட்டக்காரர், தொடக்க ஆட்டக்காரர் தனுஷ்க குணதிலக மற்றும் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓராண்டு தடை மற்றும் தலா 10 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதன்படி மூன்று வீரர்களின் கோரிக்கை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிக்கையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
இதேவேளை குறித்த வீரர்கள் மூவரும் ஏற்கனவே அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்தி விட்டமை குறிப்பிடத்தக்கது.