ஓரியோவில் பஜ்ஜியா : கடைக்காரரின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள் : வைரல் வீடியோ!
ஒருவர், ஓரியோவில் பஜ்ஜி போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய தின்பண்டங்களில் பக்கோடாக்கள், பஜ்ஜிக்கள ஆகியவை பலரது மறுக்கமுடியாத தேர்வாக உள்ளது.
வெங்காய பஜ்ஜியோ, உருளைக்கிழங்கு பாஜியோ எதுவாக இருந்தாலும் பஜ்ஜி உணவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
சைவத் தேர்வுகளிலிருந்து மீன் பக்கோடா மற்றும் சிக்கன் பக்கோடா போன்ற மிகவும் கவர்ச்சியான அசைவ வகைகள் வரை பரவியுள்ளது. ஆனால் ஓரியா பஜ்ஜியை பார்த்திருக்கிறார்களா?
ஓரியோ பஜ்ஜி
சமீபத்தில் ஓரியோவில் ஒருவர் பஜ்ஜி போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாக்லேட், வென்னிலா ஃப்ளேவர்களில் இருக்கும் இந்த பிஸ்கட்டுகளில் பலர் கேக் செய்வர், சாக்லேட் செய்வர், ஆனால் பஜ்ஜி கூட செய்வார்களா? என்று இதை பார்த்த நெட்டிசன்கள் வாய் பிளந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்த வைரல் வீடியோவில் பஜ்ஜி போடும் நபர், ஒரியோ பாக்கெட்டை பிரித்து, அதை பஜ்ஜி மாவில் தோய்த்து, பின்பு எண்ணெயில் பொறித்து எடுக்கிறார்.
அகமதாபாத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வீடியோ, தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
இப்படி வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துகளை கமெண்டுகள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர், “ஐயோ சாமி..இதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
இன்னொருவர், “இது மிகுந்த பைத்தியக்கார தனம், இது போன்ற விஷயங்களை பதிவிடவே கூடாது” என்று கூறியுள்ளார்.
ஒருவர், நல்ல உணவையே ஒருவர் கெடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.