சுற்றுலா விசாவில் சென்று இனி வேலை பார்க்க முடியாது
சுற்றுலா விசாவில் பஹ்ரைனுக்கு வந்து அனுசரணையாளர் இன்றி தொழில் விசாவாக மாற்ற முடியாது என பஹ்ரைன் அறிவித்துள்ளது.
பஹ்ரைனின் 1965 குடியேற்றச் சட்டத்தின் திருத்தங்களின்படி, எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு வெளிநாட்டவர் நுழைவு விசாவை தொழில் அல்லது குடியிருப்பு அனுமதியாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது என பஹ்ரைனின் இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை மேற்கோள்காட்டி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை அறிவித்துள்ளது.
தினார் கட்டணம்
இருப்பினும், சுற்றுலா விசாவை சலுகைக் காலத்துடன் கூடிய பணி விசாவாக மாற்ற அனுமதிக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன, அதன்படி, முன்னர் வசூலிக்கப்பட்ட 60 பஹ்ரைன் தினார் கட்டணம் 250 பஹ்ரைன் தினார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024 பிப்ரவரி 13 முதல் பஹ்ரைன் மாநிலத்தில் வேலைவாய்ப்புக்காக சுற்றுலா விசா மூலம் நுழைவதை தடை செய்ய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
. அதன்படி, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, 1965 ஆம் ஆண்டு பஹ்ரைனின் குடிவரவுச் சட்டத்தின் திருத்தங்களின்படி, எந்தவொரு சூழ்நிலையிலும், அனுசரணையாளர் இல்லாத வெளிநாட்டவர், நுழைவு விசாவை பணி வதிவிட அனுமதியாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த சூழ்நிலையின் அடிப்படையில், பஹ்ரைனில் அதிகளவானோர் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி பஹ்ரைனில் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.