மேடையில் மணமகன் செய்த செயலால் திருமணத்தை நிறுத்திய பெண்; உறவினர்கள் திகைப்பு!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடிபோதையில் இருந்த மணமகன், மணமகளுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த ஒரு நண்பருக்கு மாலை அணிவித்ததால் , மணமகள் ஆத்திரம் அடைந்து திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு சம்மதித்த இளம் பெண் ஒருவர் மணமேடையில் மணமகனுக்காக காத்திருந்தார்.
குடிபோதையில் தள்ளாடிய மணமகன்
அப்போது மணமகன், குடிபோதையில் தள்ளாடியபடியே மணமேடைக்கு வந்ததை கண்ட மணமகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனை அடுத்து, குடிபோதையில் இருந்த அந்த மணமகன், மணப்பெண்ணுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த அவரது நண்பருக்கு மாலை அணிவித்தார்.
இதனால் கடும் கோபமடைந்த மணமகள் "இந்த இளைஞரை நான் திருமணம் செய்ய மாட்டேன்" என தெரிவித்ததால், மணமேடையில் பரபரப்பு ஏற்பட்டது.
மணமகளின் குடும்பத்தினர், மணமகளை சமாதானப்படுத்த முயன்ற போதிலும், திருமண நாளிலேயே போதையில் இருந்தால், அவர் எப்படி என்னை காப்பாற்றுவார்?" என்று மணப்பெண் கேள்வி எழுப்பியதுடன் திருமணத்தையும் நிறுத்தியதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதுமட்டுமன்றி, மணப்பெண் நேரடியாக பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்த நிலையில் , மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாகவு கூறப்படுகின்றது.