தாய் ஒருவரின் விபரீத முடிவால் மூன்று பிள்ளைகளுக்கு நேரவிருந்த துயரம்
பதுளையில், தனது மூன்று மகள்களுக்கும் விஷம் அருந்தச் செய்து தாயும் விஷம் அருந்திய சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பதுளை, வேவெல்ஹின்ன தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச் சம்பவத்தில் 31 வயதுடைய தாய் ஒருவரே 7, 5 மற்றும் 4 வயதுடைய மூன்று பிள்ளைகளுக்கு இவ்வாறு விஷம் அருந்தியுள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார சுமை காரணமாக தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தவலறிந்து அக்கம் பக்கத்தினர் நால்வரையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் வைத்தியர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.