யாழில் வெள்ள நீரில் விஷமிகளின் மோசமான செயல்!
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும் , கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில் விஷமிகள் கழிவுகளை வீசி வருவதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது மழை காலம் ஆரம்பித்ததுள்ள நிலையில் , குறித்த ஒழுங்கை பகுதியில் வெள்ளநீர் தேங்கி நிற்பதனால் , ஒழுங்கைக்குள் வசிப்பவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட வியடங்களில் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வீதிகளில் வெள்ளநீருடன் கழிவுகள்
குறித்த வீதிகளில் கழிவுகளை கொட்டுவதனால் , அப்பகுதிகளில் வசிப்போர் பலத்த இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வீசப்படும் கழிவுகள் மழை வெள்ளத்தில் மிதந்து வீட்டு வளவுக்குள் வருவதனாலும், வீதிகளில் வெள்ளநீருடன் கழிவுகள் சிதறி காணப்படுவகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாநகர சபை உள்ளிட்ட தரப்புகளுக்கு அறிவித்துள்ள போதிலும் , உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேசமயம் விசமிகளின் இந்த நடவடிக்கைல் தொற்றுநோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.