வெடிமருந்து உட்கொண்ட யானை குட்டி
அநுராதபுரம், ரணோராவ பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் வெடிமருந்து உட்கொண்டு சுகயீனமுற்ற யானை குட்டி ஒன்றுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 வயதுடைய யானை குட்டி ஒன்றே வெடிமருந்து உட்கொண்டு சுகயீனமுற்றுள்ளள்ளது.
வெடிமருந்து உட்கொண்டதால் வாய் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக யானை குட்டி பல நாட்களாக உணவு உட்கொள்ள முடியாமல் தண்ணீர் குடிக்க முடியாமல் இருந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டுலகம வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் குகுல்கடுவ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தலைமையில் யானை குட்டிக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.