இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாபா வங்காவின் கணிப்புகள்
2026 இல் என்னென்ன ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம் என்று பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ளதாக அவரை ஆய்வு செய்பவர்கள் கூறியுள்ள விடயம் தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சி வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாபா வங்கா (Baba Vanga) என்பவர் பல்கேரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு ஜோதிட கணிப்பாளர். பல உலக நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

3ஆம் உலகப் போர்
2026 ஆம் ஆண்டில் 3ஆம் உலகப் போர் தொடங்குவதற்கான அபாயகரமான சூழ்நிலை உருவாகும் என்று பாபா வங்கா எச்சரித்துள்ளார்.
உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையே பதற்றம் மிக அதிகமாகும். குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா-தைவான் போன்ற நாடுகளுக்கு இடையேயான மோதல்கள் உச்சத்தை எட்டும் என்று அவர் கணித்திருக்கிறார்.
இந்தப் போரில் மேற்கு நாடுகள் அழிவைச் சந்திக்க நேரிடும் என்றும், கிழக்கு நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளார்.

AI ஆதிக்கம்
AI ஆனது மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக வேலைவாய்ப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இது மனித இனத்திற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
