2027 இல் மனிதர்கள் 'சூப்பர் ஹியூமனாக மாற்றம்; வைரலாகும் பாபா வங்காவின் கணிப்புகள்!
2027-ஆம் ஆண்டில் ஒரு விசித்திரமான நோய் அல்லது மரபணு சோதனைகள் (Genetic Mutations) மூலமாக சில மனிதர்களுக்கு 'சூப்பர் ஹியூமன்' (Superhuman) எனப்படும் அசாத்தியமான சக்திகள் கிடைக்கக்கூடும் என்று பாபா வங்காவின் கணிப்புகள் வைரலாகி வருகின்றது.
பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா 1996-ஆம் ஆண்டே காலமானார். அவர் தனது கணிப்புகளை எங்கும் எழுதி வைக்கவில்லை.

அசாத்தியமான சக்திகள் கிடைக்கக்கூடும்
அவரது ஆதரவாளர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் வாய்மொழியாகக் கூறியவற்றின் அடிப்படையிலேயே இத்தகைய கணிப்புகள் தற்போதைய காலத்திற்கு ஏற்ப இணையத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் அறிவியல் பூர்வமான உண்மை அல்ல:
மரபணு மாற்றங்கள் அல்லது நோய்கள் மூலம் மனிதர்கள் ஒரே வருடத்தில் சூப்பர் ஹியூமன்களாக மாறுவது என்பது அறிவியல் ரீதியாகச் சாத்தியமற்றது.
இது வெறும் கற்பனையான அறிவியல் புனைகதை (Science Fiction) போன்றது மட்டுமே ஆகும் இது தவிர, வரும் ஆண்டுகளில் மனிதர்கள் ஏலியன்களைச் சந்திப்பார்கள், உலகப் போர் ஏற்படும், செயற்கை நுண்ணறிவு (AI) உலகை ஆக்கிரமிக்கும் போன்ற கணிப்புகளும் பாபா வங்காவின் கணிப்புகள் என்ற பெயரில் உலா வருகின்றன.
கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் 9/11 தாக்குதல்கள் குறித்த கணிப்புகளைச் சரியாக வெளியிட்டதாகக் கருதப்படும் சர்ச்சைக்குரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா(Baba Vanga), தற்போது அடுத்த ஆண்டுக்கான ஒரு திடுக்கிடும் கணிப்புடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக, 2025-ஆம் ஆண்டில் வேற்றுக்கிரக உயிரினங்கள் பூமியில் தரையிறங்கும் என்று 2024-ல் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் நினைவில்கொள்ளத்தக்கது.
பார்வையற்ற அந்த பல்கேரியப் பாட்டி இறந்து சுமார் மூன்று தசாப்தங்கள் ஆகிவிட்டன. ஆனால், அவர் இறப்பதற்கு முன் கூறிய கணிப்புகள் இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.