2026ல் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரழிவுகள் ; பாபா வங்காவின் பகீர் கிளப்பும் கணிப்பு
உலகில் உள்ள பல தீர்க்கதரிசிகளில் பாபா வங்காவும் ஒருவர். ஏனென்றால், பாபா வாங்காவின் பல்வேறு கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்பே கணித்துள்ளார். அதன்படி, இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிகழ்ந்துள்ளன.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் தனது பார்வையை இழந்தார். ஆனால், பார்வை இழந்த பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதியதாக கூறப்படுகிறது.

உலகையே மாற்றும் 2026
அந்த வகையில் 2026ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் மிகவும் குறிப்பிடத்தக்க கணிப்புகளில் ஒன்று தீவிர இயற்கை நிகழ்வுகள் தொடர்புடையது.
அந்த வகையில், பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை பிரச்சனைகள் ஆகியவை கிரகத்தின் நிலப்பரப்பில் 7 முதல் 8% பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பாபா வாங்காவின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் உலகையே பேரழிவிற்கு உட்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் ஆகியவையும் ஏற்படுமாம்.

இதன் காரணமாக, 2026ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவுகள் பூமியின் நிலப்பரப்பில் 7% முதல் 8% வரை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மேலும், இது சுற்றுச்சூழல் அமைப்புகளை அழித்து உலகையே உலுக்குமாம்.
2026ல் சுற்றுச்சூழல் அமைப்புகள் அழிக்கப்பட்டால், அது அழிவின் தொடக்கத்தைப் போன்றது என்று தெரிவித்துள்ளார்.