இலங்கையின் ஆயுர் வேதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்
இலங்கையின் ஆயுர் வேதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என திணேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆயுர்வேதம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளதாகவும் இந்தத் தொழில் மூலம் அந்நியச் செலாவணியை உருவாக்குவதற்கான முறைமை நடைமுறையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை மதிப்பீடு செய்த பின்னர், நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள உள்ளூர் ஆயுர்வேத மையங்களை திறப்பதன் மூலம் அந்நிய செலாவணியை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுர்வேதப் பட்டம் பெற்ற அனைவரையும் இந்த தேசியப் பணியில் தீவிரமாக இணையுமாறு அழைப்பு விடுத்த பிரதமர், ஆயுர்வேத மருத்துவத்துறை இலங்கையின் மருத்துவத் துறையின் கோட்டையாக உள்ளது.
அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிகளைப் பாராட்டிய பிரதமர், மருத்துவத் துறையானது ஒரு மருத்துவ முறைக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் பிரதமர் .