தேவையற்ற பயணங்களை தவிருங்கள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி காடுகளுக்கு சுற்றுலாப் பயணம் செல்லுதல், மலையேறுதல், ஆற்றில் நீராடுதல், படகு சவாரி செய்தல் உள்ளிட்டவற்றை தவிக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த அறிவிப்பை மீறி சட்டவிரோதமான பயணங்களை மேற்கொண்டு ஏனையவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் கொரோனா பரவலைக் கருத்திற் கொண்டு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் , இவற்றின் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.