தேர்தல் காலங்களில் மோதல்களைத் தவிர்ப்பது முக்கியமானது
தேர்தல் காலங்களில் நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, நாடாளுமன்றத்துக்கிடையில் மோதல்களைத் தவிர்ப்பது முக்கியமானது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) காலை நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
பொலிஸ் மா அதிபர் விவகாரம்
தேர்தல் தொடர்பிலும், பொலிஸ் மா அதிபர் விவகாரம் தொடர்பில் பல தரப்பினராலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தனது X பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் காலங்களில் நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, பாராளுமன்றத்துக்கிடையில் மோதல்களைத் தவிர்ப்பது முக்கியம். சுயநலத்தை விட நாட்டின் எதிர்காலம் முக்கியமானது கருஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.