ஏவிஎம் சரவணன் காலமானார்; திரைத்துறையினர் இரங்கல்
இந்திய திரைத்துறையின் பிரபலமான திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 86. இந்திய திரைத்துறையின் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ்.

சிவாஜி கணேசன், கமல்ஹாசன் அறிமுகம் செய்த நிறுவனம்
தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் தயாரித்துள்ளது.
நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரை வெள்ளித்துறையில் அறிமுகம் செய்த நிறுவனம் ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் ஆகும் தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ஏவிஎம் சரவணன் கவனித்துள்ளார்.

இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பையும் இவர் கவனித்துள்ளார். ஏவிஎம் சரவணன் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.
வெள்ளை நிற ஆடையை அணிவது அவரது அடையாளமாக இருந்தது. இந்நிலையில் அவரது மறைவுக்கு தமிழ் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.