இலங்கையில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு பெண்!
பள்ளத்தில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் அவுஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கம்பளை ஹெம்மாதகம வீதியில் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெற்ற விபத்து
ஹெம்மாதகம நோக்கி செல்லும் வீதியின் பலத்கமுவ பகுதியில் சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 12 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் காரின் சாரதியும் இரண்டு அவுஸ்திரேலிய பெண்களும் காயமடைந்துள்ளதுடன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 67 வயதுடைய அவுஸ்திரேலிய பெண் எனவும் சாரதி உறங்கியமையே விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.