இலங்கையில் பிரபல சுற்றுலா தளத்தை பார்க்க சென்ற வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த சோகம்!
இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், பிரபலமான இடத்தை பார்வையிட சென்றபோது பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 74 வயதுடைய பிரஜையே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அவுஸ்திரேலியாவில் இருந்து 18 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று கடந்த 10-12-2024 ஆம் திகதி இலங்கை வந்துள்ளது.
அவர்கள் நேற்றையதினம் (22-12-2024) பலாங்கொடை - நன்பெரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வேளையில், குறித்த அவுஸ்திரேலிய பிரஜை தவறி வீழ்ந்து காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், நன்பெரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பனிமூட்டமான வானிலை காணப்படுவதால் விபத்துக்கள் அதிகம் வாய்ப்புள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.