இலங்கை அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!
ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின, இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 17 ஓவரில் 155 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்ப்பில் குசல் பெரேரா மற்றும் சரித் அசலங்க இருவரும் தலா 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காமால் 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க், பெட் கம்மின்ஸ் மற்றும் அடம் ஷம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் அவுஸ்திரேலியா அணிக்கு 155 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
155 ஓட்டங்கள் வெற்றி இலங்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரேன் பிஞ்ச் அதிரடியாக ஆடிவந்தனர். அரேன் பிஞ்ச் 37ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வனிந்து ஹாசராங்க பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மெக்ஸ்வேல் செற்ப ஓட்டங்களுக்கு வெளியேற அவுஸ்திரேலியா அணி 8.3 ஓவரில் 80 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
பின்னர் களமிறங்கிய ஸ்மித் மற்றும் மறுமுனையில் அடிவந்த ஆரேன் பிஞ்ச் நிதனமாக அடிவந்தனர், இந்நிலையில் இலங்கை அணி நிர்ணயித்த 155 ஓட்டங்களை 17 ஓவரில் அவுஸ்திரேலிய அணி அடித்து வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.