இந்த நாடுகளுக்கு செல்ல இனி அவுஸ்திரேலியர்களுக்கு அனுமதி தேவையில்லை
அவுஸ்திரேலியா நாடு மக்கள் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய அரசின் அனுமதிபெற தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் எல்லைகள் 18 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அவை மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அவுஸ்திரேலியா உள்துறை,சுகாதார அமைச்சகங்கள் வெளியிட்ட அறிக்கையில் வெளியான தகவலானது,
அவுஸ்திரேலியா நாட்டு மக்களுக்கு குறிப்பிட்ட சில நடக்குகளுக்கு செல்ல அரசின் அனுமதி பெற அவசியமில்லை அதுவும் முழுமையான தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொருந்தும் என தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தாமல் பயணிக்கக்கூடிய நாடுகளின் பட்டியலை, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வர்த்தகத் துறை (DFAT) வழங்கியுள்ளது.
முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்ட அவுஸ்திரேலியர்கள் தனிமைப்படுத்தல் இன்றி செல்லக்கூடிய நாடுகளின் பட்டியல் பின்வருமாறு,
இத்தாலி, கிரீஸ் ,ஜெர்மனி, ஐக்கிய இராஜ்ஜியம்,ஐக்கிய அமெரிக்கா,தென்னாபிரிக்க, கனடா ஆகிய நாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.