இலங்கை துணைத் தூதுவருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் விதித்த உத்தரவு!

Government Employee Government Of Sri Lanka Sri Lankan Peoples Australia
By Shankar Aug 20, 2024 09:45 PM GMT
Shankar

Shankar

Report

ஆஸ்திரேலியாவுக்கான இலங்கையின் துணை தூதுவராகச் செயற்பட்ட ஹிமாலி அருணதிலகவின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவருக்கு 543,000 டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை இராஜதந்திரி ஹிமாலி, ஆஸ்திரேலியாவின் ஊழியச் சட்டத்தை மீறியுள்ளார் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டிவந்த நிலையிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை துணைத் தூதுவருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் விதித்த உத்தரவு! | Australia Court Order Sri Lankan Deputy Ambassador

கன்பராவிலுள்ள துணை தூதுவரின் இல்லத்தில் பணியாற்றுவதற்காக பிரியங்கா தனரத்ன என்ற பெண் வந்துள்ளார்.

2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் குறித்த வீட்டில் அவர் பணிபுரிந்துள்ளார். மூன்று ஆண்டுகளாக வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றிய பிரியங்காவுக்கு அக்காலப்பகுதிக்கான ஊதியமாக 11, 212 டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாரமொன்றில் 36 மணிநேரப் பணிக்கான தேசிய மட்டத்திலான குறைந்தபட்ச ஊதியம் 656.90 டொலர்கள் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை துணைத் தூதுவருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் விதித்த உத்தரவு! | Australia Court Order Sri Lankan Deputy Ambassador

அத்துடன், அனுமதிக்கப்பட்டதை விட அதிக நேரம் பணிக்கு அமர்த்தி, நிர்ணயிக்கப்பட்டதை விடவும் குறைந்தளவு ஊதியம் வழங்கி அஸ்திரேலியாவின் ஊழியச்சட்டத்தை தூதுவர் மீறியுள்ளார் எனவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் நியாயமான ஊழியச்சட்டத்தின்கீழ் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக பிரியங்கா தனரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் சார்பாக சட்டத்தரணி டேவிட் ஹிலார்ட் முன்னிலையானார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளை அடுத்து, ஹிமாலி அருணதிலகவினால் நியாய ஊழியச்சட்டம் பல்வேறு வழிகளில் மீறப்பட்டிருப்பதாகவும், எனவே அவர் செலுத்தவேண்டியிருக்கும் 374,000 டொலர் நிலுவைச் சம்பளத்துடன், வட்டியாக 169,000 டொலரைச் சேர்த்து மொத்தமாக 543,000 டொலர்களை பிரியங்கா தனரத்னவுக்குச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக்க, ஐ.நாவுக்கான இலங்கையில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக தற்போது பதவி வகிக்கின்றார்.

அதேவேளை, இவ்வழக்குடன் தொடர்புடைய வீட்டுப்பணிப்பெண் அவரது 3 வருட பணிக்காலத்தை முழுமையான நிறைவுசெய்திருந்த நிலையில், தொழில் வழங்குனர ஹிமாலி அருணதிலக ஆஸ்திரேலியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு வருவதற்குத் திட்டமிட்டிருந்த தினத்துக்கு முதல் நாள், தொழில் வழங்குனரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறிவிட்டார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வீட்டுப்பணிப்பெண்ணின் ஊதியமாக வெளிவிவகார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த கொடுப்பனவு அவருக்கு முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US