முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் கடத்திய மாமியும் மருமகளும்
பேராதனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹீரியகம பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முச்சக்கர வசண்டியொன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பெண்களைக் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மாமி மற்றும் மருமகள் உறவு முறையான இவர்களிடமிருந்து 90 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
கைதான இரு பெண்களும் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதி ஆகிய மூவரும் கேகாலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதே நேரம் கைதுசெய்யப்பட்ட ஒரு பெண்ணின் கணவரும் ஹெரோயின் சம்பந்தமாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ள ஒருவர் என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பேராதனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.