பிக் பாஸ் வீட்டில் 50 நாட்கள் வரையில் கடினமான போட்டியாளர் யார்?....பாரபட்சமின்றி பட்டியலிட்ட ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன் 5 தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் போட்டி,பொறாமை ,வன்மம்,அன்பு என அணிந்திருக்கும் பஞ்சமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் தனது நாட்களின் பாதி கடலை தாண்டிவிட்டது. 50 நாட்களை நெருங்கியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் அவர்கள் ரசிகர்களிடம் உங்கள் கணிப்பில் யார் கடினமான போட்டியாளர் என்று கருதுகிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்.
அதற்கு ரசிகர்கள் பலர் ராஜு தான் கடினமான போட்டியாளர் என்கின்றனர். ஒரு சிலரோ ராஜு,வருண் மற்றும் சிபி ஆகியோர் கடினமான போட்டியாளர்கள் என கூறுகின்றனர். மேலும் அபிஷேக் வீட்டிற்குள் வருவதற்கு முன்பு இருந்த பிரியங்கா எங்களுக்கு பிடிக்கும் என்றும் இந்த சீசனின் போட்டியாளர்கள் அனைவரும் முரட்டுத்தனமாக வும், பழிவாங்கும் குணத்துடனும் இருப்பதாகவும் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இறுதியாக கமல் அவர்கள் எதிர்பாராததை எதிர்பாருங்கள் எனக் கூறுவதோடு ப்ரோமோ முடிவடைகிறது.