அவதானம் மக்களே; காத்தான்குடி பொலிஸார் விடுத்த அறிவிப்பு!
மட்டக்களப்பு -காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு காத்தான்குடி பொலிசார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
இதன் காரணமாக வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரங்களில் வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை கொள்ளையர்கள் திருடிவருகின்றனர்.
இதனால் வீடுகளை விட்டு வெளியில் செல்லும் போது வீடுகளில் ஆட்களை இருத்தி விட்டுச் செல்லுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸாரால் மட்டும் தடுக்க முடியாது
அதேபோல் பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ளமையாலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வீதிகளில் நடமாடும் ஐஸ் மற்றும் போதைப் பாவரனையார்ளர்கள் தொடர்பான தகவல்களையும் பொதுமக்களாகிய நீங்கள் பொலிசாருக்கு அறியத்தரும் படியும் பொலிசார் கோருகின்றனர்.
திருட்டுச் சம்பவங்களையும் போதைப் பொருள் பாவனையையும் வெறுமனே பொலிசாரினால் மாத்திரம் ஒழித்துவிட முடியாது என தெரிவித்த பொலிசார், பொதுமக்களின் ஒத்துழைப்புடனேயே இக்குற்றச் செயல்களை ஒழிக்க முடியும.
குற்றச்செயல்களை தடுக்க பொதுமக்கள் (தொலைபேசி இலக்கம்-0652246595) மற்றும் குற்றத்தடுப்பு பொறுப்திகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் (அலைபேசி இலக்கம்-0777142247) இலக்கங்களின் ஊடாக தகவல்கள் வழங்குமாறும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.