பிக்மி மற்றும் ஊபர் சாரதிகள் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்கத் தவறிய பொலிஸ்
இலங்கையின் சுற்றுலா பகுதிகளில் முச்சக்கர வண்டி வாடகை சேவை சாரதிகள் மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிக்மி' மற்றும் 'ஊபர்' சாரதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல முறைப்பாடுகள்
இவ்விவகாரம் தொடர்பாக சுற்றுலா பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
'பிக்மி' மற்றும் 'ஊபர்' போன்ற முச்சக்கர வண்டி வாடகை சேவைகளின் சாரதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து உள்ளூர் முச்சக்கர வண்டி சாரதிகள் மீது குறிப்பாக தென் பகுதி மற்றும் கண்டியிலிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை முச்சக்கர வண்டி சேவைகள் சுற்றுலாப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுத்து, மீற்றர்களைக் கொண்ட உள்ளூர் முச்சக்கர வண்டிகள் சுற்றுலாப் பயணிகளிடமும் உள்ளூர் மக்களிடமும் அதிக கணட்டனத்தை வசூலிப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.