குடும்பங்களுக்கு இடையில் தகராறு; ஈரப்பலாக்காயால் தாக்கி கொலை
79 வயதுடைய பெண் ஒருவரின் தலையில் ஈரப்பலாகாயால் தாக்கி கொலை செய்த 25 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மல்சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
மல்சிரபுரவை சுற்றியுள்ள கிராமத்தில் வசித்து நான்கு பிள்ளைகளின் தாயான எச்.சி.அசிலின் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு குடும்பங்களுக்கு இடையில் தகராறு
சந்தேகநபரான இளைஞன் கைது செய்யப்பட்டு , கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஈரப்பலாகாயை கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் சந்தேகநபர் பெண்ணின் கையில் இருந்த ஈரப்பலாகாயை பிடுங்கி, அப்பெண்ணின் தலையில் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான பெண் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது பெண் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.