கோட்டா கோ கம தாக்குதல் குண்டர்களுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை!
கோட்டா கோ கம அறவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை மேற்கொண்ட குண்டர்களுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பதாம் திகதி கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை மேற்கொண்ட குண்டர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து நையப்புடைத்தனர்.
அதுமாத்திரமன்றி படுகாயமடைந்த அவர்களை ஆம்புலன்ஸ்கள் ஏற்றிச் செல்ல மறுப்புத் தெரிவித்ததுடன். அரசாங்க மருத்துவமனைகளிலும் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அன்றைய தினம் காயமுற்ற குண்டர்களுக்கு நாரஹேன்பிட்டவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து தற்போது பெரும்பாலானவர்கள் வௌியேறிச் சென்றுவிட்டனர்.
இதுவரை காலமும் ராணுவத்தில் பணியாற்றுவோர், முன்னாள் ராணுவத்தினர் உள்பட அவர்களின் நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கு மாத்திரமே சிகிச்சை அளிக்கப்பட்ட ராணுவ மருத்துவமனையில் வரலாற்றில் முதல்தடவையாக குண்டர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.