யாழில் இளைஞர் மீது தாக்குதல்; நீதிமன்றம் விடுத்த உத்தரவு
யாழில் வீதியில் பயணித்த இளைஞனை வழிமறித்து தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 05 இளைஞர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு , யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதியில் பயணித்த தன்னை வழிமறித்து இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதாக , தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இளைஞனின் முறைப்பட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , ஐந்து இளைஞர்களை கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் மேலதிக நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை , ஐவரையும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.