அநுராதபுரம் வைத்தியசாலையின் இரு மருத்துவர்கள் மீது தாக்குதல் !
வாரியப்பொல நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் ஒருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிள்றார்.
இச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் விசேட பொலிஸ் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளதையடுத்து, வாரியபொல பொலிஸார் சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் குழுவொன்று பணி அமர்வில் பங்குபற்றுவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பேருந்தில் சென்று அநுராதபுரம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.