தடுப்பு நிலையத்தில் வெளிநாட்டுப் பெண் மீது தாக்குதல் ; ஒருவர் கைது!
இலங்கையில் வீசா இன்றி சட்டவிரோதமாகத் தங்கியுள்ளோரை தடுத்து வைக்கும் மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள நிலையத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி களால் நடத்தப்படும் மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள நிலையத்தில் தங்கியிருந்த இந்தியப் பெண் ஒருவரை மடகஸ்கார் நாட்டுப் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணை 29 வயதான மடகஸ்கார் பெண் தாக்கியுள்ளமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மடகஸ்கார் நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.