ஈரானின் புதிய உச்ச தலைவர் மீது தாக்குதல்; இஸ்ரேல் ஊடகங்கள் பரபரப்பு தகவல்
இஸ்ரெல் தாக்குதலில் ஈரான் புதிய உச்ச தலைவரான மொஜ்தாபா கமேனி (Mojtaba Khamenei) காயமடைந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த வீரர் என்ற பொருள் கொண்ட ஜான்பாஸ் (Jaanbaz) என இரான் அரசு ஊடகங்கள் அழைத்து வருவதை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மொஜ்தாபா கமேனி ஒருமுறைகூட பொதுவெளிக்கு வரவில்லை
இந்தச் செய்திகள் உண்மை என்று சொல்லும் வகையில் புதிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மொஜ்தாபா கமேனி (Mojtaba Khamenei) ஒருமுறைகூட பொதுவெளிக்கு வரவில்லை.
பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டமை ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஈரானின் பதிலடி முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது. இதனையடுத்து அயதுல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தாபா கமேனி (Mojtaba Khamenei) ஈரானின் அடுத்த அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தாக்குதலில் ஈரான் புதிய உச்ச தலைவரான மொஜ்தாபா கமேனியும் (Mojtaba Khamenei) காயமடைந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதேவேளை போரின் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காமடைந்திருக்கலாம் என ஈரான் ஊடகங்கள் ஊகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.