யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அரச ஊழியர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்!
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை பார்ப்பதற்கு சென்றிருந்த அரச ஊழியர் ஒருவர் மீது காவலாளிகள் தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 26ம் திகதி இடம்பெற்றதாக கூறபொபடுகின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமது தாயாரை பார்ப்பதற்காக இருவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
இதன் போது ஒருவர் மட்டுமே வைத்தியசாலை விடுதிக்குள் சென்று நோயாளரை பார்வையிட முடியும் என பாதுகாப்பு உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
வாக்குவாதம்
இந்நிலையில் ஏன் பாரபட்சமாக நடக்கிறீர்கள்? வேறு நோயாளியை பார்ப்பதற்கு ஒரே நேரத்தில் சில பார்வையாளர்களை அனுமதித்தீர்களே என பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஒன்றுகூடிய வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த தபாலக ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த தொடர்பாக யாழ்.பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.