டயானா கமகே தாக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்டமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தின் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான அஜித் ராஜபக்ஷ இது தொடர்பான அறிக்கையை சபாநாயகரிடம் நேற்று கையளித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் வார்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் டயானா கமகே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்பட்டிருந்தது,
கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னரே குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.