கட்டார் மீதான தாக்குதலால் மத்திய கிழக்கில் திடீர் பதற்றம் ; இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை
சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் தமது அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கும் கட்டாரின் பிரதமர்
தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தோஹாவில் ஹமாஸ் மீதான இஸ்ரேலின் கொடிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் உரிமை தனது நாட்டிற்கு இருப்பதாக கட்டாரின் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கட்டாரில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சமூக ஊடகங்களைக் கண்காணிக்குமாறும் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.