யாழில் நேர்ந்த கொடூரம் ; பெற்ற பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை
யாழ்ப்பாணத்தில் தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளார்.
சிறு பிள்ளை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. 6 வயதான சிறு பிள்ளை உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியது.
குடும்பத்தினர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். உணவில் கிருமிநாசினி கலந்து ஊட்டியதாலேயே சிறு பிள்ளை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்ததும், உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டார்.
அவரை கைது செய்ய இளவாலை பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் மனநல காரணங்கள் உள்ளனவா என்றும் பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.