புத்தளத்தில் இடம்பெற்ற சோக சம்பவம்: உடல் கருகி உயிரிழந்த நபர்!
புத்தளம் வண்ணாத்திவில்லு சேரக்குலிய பகுதியில் ஓலைக் குடிசை ஒன்று தீப்பற்றி எரிந்ததில் குடிசைக்குள் இருந்த நபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வண்ணாத்திவில்லு காவல்துறை தெரிவித்துள்ளது.
குடிசையில் தீப்பற்றிய நிலையில் குடிசைக்குள் இருந்த சுகயீனமுற்ற ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குடிசையில் இருந்த வயதான நபர் பீடி புகைப்பதற்கு அங்கவீனமுற்ற பிள்ளையிடம் தீ மூட்டுமாறு கூறியுள்ளார்.
பீடியை பற்ற வைத்த பின்னர் தீக்குச்சியை வீசிய பொழுதே குடிசையில் தீப்பற்றி எரிந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக வண்ணாத்திவில்லு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் புத்தளம் நீதிமன்ற நீதவான் அசேல சில்வா குறித்த இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
உயிரிழந்த நபர் 97 வயதுடைய 12 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பி.சி. ஆர் பரிசோதனையின் பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.