தென்னிலங்கையில் கையடக்க தொலைபேசிக்காக நடந்த கொடூரம்
களுத்துறையில் கையடக்க தொலைபேசிக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கையடக்க தொலைபேசிக்காக ஏற்பட்ட தகராறு
பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் உறவினர் என கூறப்படும் 17 வயதுடைய சிறுவனே தாக்குதலை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரும் உயிரிழந்தவரும் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, கையடக்க தொலைபேசிக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர் கத்தியால் குத்தியுள்ளார்.
இருவரும் சண்டையிட்டு கொண்டிருந்த போது, அங்கு வந்த வயல் உரிமையாளர், சந்தேக நபரை தாக்கி, கையில் வைத்திருந்த கத்தியை பறித்துச் சென்றுள்ளார்.
இதேவேளை, படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.