அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!
கொழும்பு - அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் க்ளப் வசந்த எனப்படும் சுரேந்ர வசந்த பெரேரா கொல்லப்பட்ட சம்பத்துடன் தொடர்புடைய இரண்டு பேரைத் தவிர ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் (18-07-2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய எஞ்சிய இரண்டு பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது க்ளப் வசந்த உள்ளிட்ட இருவர் பலியானதுடன் பாடகி கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.