ஆதிவாசி தலைவரின் மனைவி கொரோனாவுக்கு பலி
ஆதிவாசி குடிகளின் தலைவரது மனைவி அவர்கள் கொரோனாவுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹியங்கனை – தம்பானே ஆதிவாசிகள் கிராமம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் உள்ள 115 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹியங்கனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர்களில் ஆதிவாசிகளும், சாதாரண மக்களும் உள்ளடங்குவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் கடந்த 27 ஆம் திகதி 115 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மஹியங்கனை மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னிலத்தோவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இலங்கையின் ஆதிவாசிகள் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோவின் மனைவி ஹீன் மெனிகா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.