விநாயகர் சதுர்த்தி வழிபட வேண்டிய நாள் எது தெரியுமா?
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரை போற்றி, கொண்டாடி வழிபடும் ஒரு அற்புதமான நாளாகும். இந்த நாளில் விநாயகரை நம்முடைய வீட்டில் எழுந்தருள செய்து, அவரது மனம் மகிழும் படி பூஜைகள் செய்து வழிபட்டு, வேண்டிய வரங்களையும், ஆசிகளையும் பெறும் நன்னாள் ஆகும்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ம் திகதி புதன்கிழமை வருவதாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26ம் திகதி பகல் 02.22 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி பகல் 03.52 வரை சதுர்த்தி திதி உள்ளது.
அதற்கு பிறகு பஞ்சமி திதி துவங்கி விடுகிறது. பொதுவாக மற்ற திதி, வழிபாடுகள் அனைத்தும் சூரிய உதயத்தை அடிப்படையாக வைத்து தான் கணக்கிடப்படுவது வழக்கம். ஆனால் விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி வழிபாடு என்பது சந்திரனை அடிப்படையாக வைத்து வழிபடப்படும் வழிபாடாகும்.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு தோன்றியதற்கு காரணமானவரே சந்திரன் தான்.
தடைகளை அகற்றி, ஞானத்தையும் செல்வ வளத்தையும் வழங்கக் கூடியவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளை விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் நாம் கொண்டாடுகிறோம். சதுர்த்தி என்பது திதிகளில் நான்காவது திதியாக வருவது.
அதனால் சதுர்த்தி திதியை அடிப்படையாக வைத்தே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு காரியத்தை துவங்குவதற்கு முன்பும் விநாயகரை வழிபட்டு விட்டு தான் துவங்குவது இந்துக்களின் வழக்கம்.
இதனால் விநாயகரின் அருளால் அந்த காரியத்தில் வெற்றி, லாபம் ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதுவும் விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தி நாளில் அவரை மனதார வழிபட்டால் வளர்ச்சி, புதிய துவக்கம் ஆகியவை ஏற்படுவதுடன், வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள், துன்பங்கள், சவால்கள், சிக்கல்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும் நம்பப்படுகிறது.
இதனால் விநாயகர் சதுர்த்தி, அனைத்த தரப்பினராலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.