ருத்ராட்சம் அணிபவரா நீங்கள்? உங்க ராசிப்படி எந்த ருத்ராட்சம் அணிய வேண்டும் தெரியுமா?
சிவ பெருமானின் அம்சமாக கருதப்படுகிறது. சிவ பெருமானின் கண்ணீர் துளிகளில் இருந்து ருத்ராட்சம் உருவானதாக சொல்லப்படுகிறது. அதனால் சிவனின் அருளை பெற விரும்புபவர்கள் ருத்ராட்சம் அணிவதை பழக்கமாக வைத்துள்ளனர். இன்னும் சில ஆன்மிக பலம் அதிகரிப்பதற்காகவும் இதை அணிவது உண்டு.
ஆனால், ருத்ராட்சத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற ருத்ராட்சம் வேறுபடும். அதை தெரிந்து அணிவது நல்லது. எந்த ராசிக்கு எந்த ருத்ராட்சம் அணியலாம், எதை தவிர்க்கலாம், ராசிப்படி ஒவ்வொருவரும் எத்தனை முக ருத்ராட்சத்தை அணிவதால் நன்மைகள் அதிகரிக்கம் என நாம் இங்கு பார்ப்போம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்கள் 3 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது அவர்களின் கோபத்தை கட்டுப்படுத்தும். அவர்களின் சக்தியை சமநிலைப்படுத்தும். 6 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது கோபத்தை அதிகமாக்கும். ருத்ராட்சம் அணிவதால் மன அமைதி கிடைக்கும். இலக்குகளை அடைய முடியும். ருத்ராட்சம் உங்களை நிலைநிறுத்தவும், உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தவும் உதவுகிறது.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்கள் 6 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது அவர்களின் திறமையை அதிகரிக்கும். நல்ல தகவல் தொடர்புக்கு உதவும். பொறுமையை கொடுக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். 3 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்கள் 4 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது அவர்களின் அறிவை வளர்க்கும். தகவல் தொடர்பு திறனை அதிகரிக்கும். தெளிவான மனநிலையை கொடுக்கும். 7 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது குழப்பத்தை ஏற்படுத்தும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்கள் 2 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது அவர்களின் உணர்வுகளை சமநிலைப்படுத்தும். மன அமைதியை கொடுக்கும். பாதுகாப்பாக உணர வைக்கும். கவலையை குறைக்கும். 3 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது உணர்வு ரீதியான நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்கள் 1 மற்றும் 12 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது அவர்களுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தலைமைப் பண்புக்கு உதவும். 2 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது கவனத்தை சிதறடிக்கும். அவர்களின் வீரத்தை குறைக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்கள் 5 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது மனதை தெளிவுபடுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். 6 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது நரம்பு மண்டலத்தை அதிகமாக தூண்டும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்கள் 6 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது உள் அமைதியையும், தெளிவையும் கொடுக்கும். நல்ல முடிவுகளை எடுக்க உதவும். 8 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்கள் 3 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது கடந்த கால கஷ்டங்களை மறக்க உதவும். நல்ல எண்ணங்களை உருவாக்கும். இது மாற்றத்திற்கும், குணப்படுத்துவதற்கும் சிறந்தது. 9 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது உணர்ச்சிவசப்படுவதை அதிகமாக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்கள் 5 அல்லது 7 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது ஞானத்தையும், ஆன்மீக வளர்ச்சியையும் அதிகரிக்கும். 6 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது கவனத்தை குறைக்கும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்கள் 7 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது பண பிரச்சனைகளை தீர்க்கும். தைரியத்தை கொடுக்கும். வேலை சம்பந்தப்பட்ட இலக்குகளை அடைய உதவும். தோல்வி பயத்தை குறைக்கும். 8 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது தேவையில்லாத வெறுப்பை ஏற்படுத்தும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்கள் 7 அல்லது 9 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது உயர்ந்த நோக்கத்துடன் இணைக்க உதவும். 2 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது அவர்களின் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கும்.
மீன ராசி
மீன ராசிக்காரர்கள் 2 அல்லது 6 முக ருத்ராட்சத்தை அணியலாம். இது உணர்வு ரீதியான தெளிவையும், இரக்கத்தையும் கொடுக்கும். அமைதியையும், ஆன்மீக தொடர்பையும் அதிகரிக்கும். 3 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டாம். அது உணர்வு ரீதியான கொந்தளிப்பை ஏற்படுத்தும்.