வீட்டில் இந்த செடி இருக்கா? கண்டிப்பா பணத்திற்கு பஞ்சம் வராது
நம்மில் பலர் வீடுகளை அலங்காரம் செய்வதில் தற்போது அதிக அக்கறை காட்டி வருகின்றனா். ஜேட் செடி வீட்டை அழகுபடுத்துவது மட்டுமல்லாமல், வீட்டிற்கு பணத்தை கொண்டு வரும்.
வாஸ்து படி, வீட்டு முற்றத்தில் மரங்களை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
பொதுவாகவே, சில தாவரங்கள் மனிதர்களுக்கு உணவை கொடுக்கிறது, சிலவற்றை மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கும். ஆனால், பல தாவரங்கள் பணத்தை ஈர்க்கும் தன்மையுடையது தெரியுமா?
ஜேட் செடி
ஜேட் செடியை (jade plant ) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை பலர் தங்கள் வீட்டில் இருக்கும் அலுவலக மேசையிலோ அல்லது படிக்கும் மேசையிலோ வைத்திருப்பார்கள். இந்த செடி பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உடையது.
பொருளாதார நிலை
வீட்டின் பொருளாதார நிலை மேம்பட விரும்பினால், இந்த செடியை வீட்டின் நுழைவாயிலின் வலது பக்கத்தில் வைக்கவும். அது நல்லது. மேலும் இதை வீட்டின் பிரதான வாயிலில் வைக்கலாம்.
தென்மேற்கு திசை
அதுபோல், இந்த செடியை அலுவலகத்தில் தென்மேற்கில் வைத்தால் வேலை வாய்ப்பு நேர்மறையாக இருக்கும். குறிப்பாக இதை அறையில் தெற்கில் வைக்க கூடாது.
கிழக்கு அல்லது வடக்கு திசை
வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் ஜேட் செடியை நட்டால் அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் இந்த செடியை வீட்டின் மையப்பகுதியிலும் நடலாம்.