நவராத்திரி 8ம் நாளில் என்ன நைவேத்தியம் படைத்து வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும்
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முக்கியமானது என்றாலும் அவற்றில் மிகவும் சிறப்புக்குரியதாகவும், சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுவது எட்டாம் நாள் வழிபாடு ஆகும். இது அம்பிகை ஆக்ரோஷமாக அசுரர்களை வதம் செய்த நாளாகும்.
தன்னுடைய பக்தர்கள் மீது உள்ள அளவு கடந்த கருணையின் காரணமாக, பக்தர்களை துன்புறுத்தும் தீமைகளை சம்ஹாரம் செய்யும் காலமாகும்.
இந்த ஆண்டு நவராத்திரியின் 8ம் நாள் அக்டோபர் 10ம் திகதி வியாழக்கிழமை வருகிறது. இந்த நாளுக்குரிய மிக முக்கியமான சிறப்பு, நவராத்திரியில் துர்கை வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக சொல்லப்படும் துர்கா அஷ்டமியாக சொல்லப்படுவது இந்த எட்டாம் நாளை தான்.
இந்த நாளில் நம்முடைய கடந்த கால தவறுகளுக்காக அம்பிகையிடம் மனதார மன்னிப்புக் கேட்டு, மனம் உருகி வழிபட்டால் அவற்றிற்கு மன்னிப்பு கிடைத்து, நம்முடைய மனதும், ஆத்மாவும் சுத்தமடைந்து புதிய வாழ்க்கையை துவக்குவதற்கான நாளாக நவராத்திரியின் எட்டாம் நாள் கருதப்படுகிறது.
வழிபாட்டு முறை
அம்பிகை நரசிம்ம தாரிணி வடிவத்தில் நமக்கு அருள்பாலிப்பாள். மலர்களாக ரோஜா இலை மற்றும் மருதாணி வைத்து, நைவேத்தியமாக பால் சாதம் சுண்டல், மொச்சைப் பயறு மற்றும் சுண்டல் பழம் வைத்து பூஜை செய்வதால் சிறப்பான பலனை பெறலாம்.
நவதுர்க்கை வழிபாடு 8ம் நாள்
துர்கையின் வடிவமான மகா கெளரியாக காட்சி தருவாள். நைவேத்தியமாக தேங்காய் சாதம் படைத்து மகாகெளரி மந்திரமான ஓம் தேவி மகாகெளரியே நமஹ என போன்றும் போது துர்கையின் இந்த வடிவத்தை வழிபடுவதால் பாவங்கள் அனைத்தும் நீங்கும். இவள் கருணையே வடிவமான தாயாக வழங்குவதால், தன்னை வழிபடும் பக்தர்களின் துன்பங்கள் அனைத்தையும் போக்கி, அளவில்லாத மகிழ்ச்சியை தரக் கூடியவள்.