அனுமனின் அருள் பெற்ற ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
அனுமனுக்கு விருப்பமான இந்த ராசிக்காரர்கள் அனுமனை தொடர்ந்து மனதார வழிபட்டு வந்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வெற்றிகள் குவியும். அவர்களுக்கு எந்த பிரச்சனை, ஆபத்து என்றாலும் அனுமன் ஓடி வந்து காப்பாற்றுவார். அனுமனுக்கு பிடித்த ராசிக்காரர்கள் யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரங்களுக்கு நிறைய வெற்றி கிடைக்கும். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு ஹனுமனுக்கும் தொடர்பு உள்ளது. இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருளாதார நிலையில இருப்பார்கள். ஹனுமனை வணங்கி வந்தால் நிறைய வெற்றி கிடைக்கும். கஷ்டங்கள் எல்லாம் தூர போகும். மேஷ ராசிக்கார்கள் தைரியசாலியாவும், புத்திசாலியாவும் இருப்பார்கள். மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றும் வைத்துக் கொள்ளாத நல்லர்களாக இருப்பார்கள். ஹனுமனின் கருணை எப்போதும் மேஷ ராசிக்காரர்களுக்கு இருக்கும். ஹனுமன் இந்த ராசிக்காரர்களின் கஷ்டத்தை எல்லாம் போக்கி விடுவார். இந்த ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள். தன்னம்பிக்கை நிறைய இருக்கும். புத்திசாலியாக இருப்பார்கள். இவர்களுக்கு ஹனுமனின் அருள் எப்போதும் இருக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்கார்கள் மீது ஹனுமனுக்கு எப்போதும் கருணை இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சிறு வயது முதலே வெற்றிகள் கிடைக்கும். இவர்களிடம் ஏதாவது ஒரு வகையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். நிறைய சம்பாதிப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்லும் பழக்கம் உள்ளவர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். இந்த ராசிக்காரர்கள் ஹனுமனோட பக்தர்கள். மனதார வழிபடுவார்கள். ஹனுமனின் அருளால் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் நன்றாக நடக்கும். சிம்ம ராசிக்காரர்கள் புத்திசாலிகள். தன்னோட அறிவாற்றலால் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். அதனால் விருச்சிக ராசிக்காரர்ககளையும் ஹனுமனுக்கு மிகவும் பிடிக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் மேல் ஹனுமனுக்கு ஒரு தனி கருணை இருக்கும். அதனால் இவர்களுக்கு வாழ்க்கையில பணம், சந்தோஷம் என எதுக்கும் கஷ்டம் இருக்காது. ஹனுமனோட கருணையால் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் மேல் ஹனுமன் எப்பவும் கருணையாக இருப்பார். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பெரிய பெயர் எடுப்பார்கள். ஹனுமனுடைய கருணையால் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்கள் மேல் ஹனுமனுக்கு ஒரு தனி கருணை இருக்கும். காரணம் மகர ராசி, செவ்வாய் கிரகத்தோட உச்ச ராசியாக உள்ளது. மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏதாவது கஷ்டத்தில் இருந்தால் அவர்கள் ஹனுமனை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பு. இவ்வாறு வழிபடுவதால் அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். கஷ்டம் எல்லாம் தூர போகும். வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றிக் கொள்ள ஏதாவது வழி கிடைக்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு முன் ஹனுமனை நினைத்து விட்டு செய்தால் நல்லது நடக்கும். அனுமன் உங்களுக்கு சரியான வழி காட்டுவார். ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொண்டால் ஹனுமன் உங்களை காப்பாற்றி அனைத்து கஷ்டங்களையும் போக்கிடுவார்.
கும்ப ராசி
கும்ப ராசியின் அதிபதி சனி தேவன். ஹனுமனை வணங்குபவர்களுக்கு சனி தேவனின் அருளும் கிடைக்கும். இந்த ராசிக்காரங்களுக்கு ஹனுமனின் கருணையால் வாழ்க்கையில் சந்தோஷம், செழிப்பு அனைத்தும் கிடைக்கும். ஹனுமனின் பக்தர்களை சனி தேவன் தொந்தரவு செய்ய மாட்டார். ஹனுமனின் கருணையால் கும்ப ராசிக்கார்கள் சிறு வயதிலேயே முன்னேறுவார்கள். கும்ப ராசிக்காரர்கள் தினமும் காலையில் குளித்து விட்டு ஹனுமன் சாலிசா படிக்க வேண்டும்.