பிரதமர் மஹிந்த தொடர்பில் ஜோதிடர்கள் கூறிய ஆரூடம் !
தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தோஷம் நீங்கி நல்லதொரு கிரக நிலை ஏற்படும் என பல ஜோதிடர்கள் ஆரூடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருகடியை அடுத்து , ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறுகோரி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த வாரம் பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருந்தார். எனினும் , அந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டதாக அலரி மாளிகைக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவர் தனக்கான புதிய இரு ஆஸ்தான ஜோதிடர்களை மஹிந்த வைத்துள்ளதாக தெரிய வருகிறது. இதனையடுத்து சமகாலத்தில் அவர்களின் ஆலோசனைக்கு அமையவே மஹிந்த செயற்பட்டு வருகிறார்.
அதன்படி பிரதமரின் ஜோதிட செயற்பாடுகள் மற்றும் ஜோதிடர்களை ஒருங்கிணைக்கப்படும் நடவடிக்கைள் பிரதமரின் அலுவலக தலைமை அதிகாரியினால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஜோதிட ஆலோசனைக்கமைய, பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஷிரந்தி ராஜபக்சவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மஹிந்தவுக்கு அழுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அரசியல் ரீதியில் தாமரை மொட்டு கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மஹிந்த தனது இராஜினாமா தீர்மானத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக  அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        